Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 NOV 1922
இறப்பு 04 FEB 2022
அமரர் ஜெசி மேரி ஜொசப்பின் எட்வேட்
வயது 99
அமரர் ஜெசி மேரி ஜொசப்பின் எட்வேட் 1922 - 2022 சுண்டிக்குளி, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுண்டிக்குளி கண்டிவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஜெசி மேரி ஜொசப்பின் எட்வேட் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர்பிள்ளை, ஜுஸ்டினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மேரிப்பிள்ளை(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற எட்வேட் அவர்களின் அன்பு மனைவியும்,

றெஜிஸ், றெஜினோல்ட், ஜெசிந்தா, மாரிபியாற்றிஸ், றெக்ஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மேளின், மார்கிறேற், செபரட்ணம், லயனல், ஜோய்ஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜரட்டினம், ராஜநாயகம், பிரட் சேவியர், காலஞ்சென்ற தெரேசா லூசியா சூசைப்பிள்ளை, காலஞ்சென்ற கிறிஸ்ரி ராஜசிங்கம் மற்றும் அஞ்சலா ஸ்ரெலா சேவியர்பிள்ளை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணம், ராசநாயகம், அரசரட்ணம், பாலசிங்கம், தெரேசா அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்ற ராஜசிங்கம், லூர்து மேரி (இலங்கை), மேரி இரட்ணமணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ரூபஸ்(சுதர்சனி), லிண்டா(பிறயன்- ஐக்கிய அமெரிக்கா), பிரிஸ்கா(டனி), ஹெலெனா(பிரசன்னா), ஜீன்(ஜோசுவா- ஐக்கிய அமெரிக்கா), பிறியானா(அகிலன்), றயன், ரொட்னி, றெஜினோல்ட், றேமண்ட் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹெல்கா, கிசோர், இஸ்ரேல், இசபெல்லா, ஜூலியன்(ஐக்கிய அமெரிக்கா), பெய்த், கபிரியேல்லா, மொராயா, ஜெஸி(ஐக்கிய அமெரிக்கா), பெற்றா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றெஜிஸ் எற்வேட் - மகன்
றெஜினோல்ட் எற்வேட் - மகன்
ஜசிந்தா - மகள்
மேரி பியற்றீஸ் - மகள்
றெக்ஸ் எற்வேட் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 03 Mar, 2022