Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 19 NOV 1954
ஆண்டவன் அடியில் 18 JUN 2024
அமரர் கந்தையா ஜெகதீஸ்வரன் (ஜெகா)
வயது 69
அமரர் கந்தையா ஜெகதீஸ்வரன் 1954 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஜெகதீஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் தான் 31 ஆனதுவோ
உங்கள் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை Dada...
 பாசம் என்னும் பிணைப்பிலே
இணைந்திருந்த நீங்கள்
எம்மைவிட்டு எங்குதான் சென்றீர்களோ!
உன் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சுக்களும்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை Dada...
காத்திருக்கின்றோம் விழிகளில் நீர் வடிய
எமைத் தேடி வருவீர்களா Dada... 
எங்களுக்கும் Mummyக்கும் தாய்போல் இருந்து
தேவையானவற்றையெல்லாம் செய்து
எங்களை அன்போடும், பாசத்தோடும்
அரவணைத்து வளர்த்தீர்களே Dada...
யார் எங்களுக்கு இவற்றையெல்லாம்
இனிமேல் செய்வார்கள்?
 இதயதுடிப்பு உள்ளவரை
எங்கள் இதய தீபம் நீங்கள் தான் Dada...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நம் இல்லத்திற்கு நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

எதிர்வரும் 18-07-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் நடைபெறும் அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொள்ளும்மாறும் அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.

 நடைபெறும் இடம்
Faelleshuset Grundtvigsvej 68,
 7430 Ikast, Denmark

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 21 Jun, 2024