Clicky

மரண அறிவித்தல்
திருமதி ஜெகதீசன் மகேஸ்வரி இறப்பு : 19 OCT 2019
பிறந்த இடம் உடுவில், Sri Lanka
வாழ்ந்த இடம் யாழ். விளான், Sri Lanka
திருமதி ஜெகதீசன் மகேஸ்வரி 2019 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அம்பலவாணர் வீதி உடுவில் அம்மையார் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சோமராந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீசன் மகேஸ்வரி அவர்கள் 19-10-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற சீனிவாசகம், ஆச்சிக்குட்டி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கருணாகரன், சந்திரகரன்(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய உத்தியோகத்தர், வவுனியா), பாஸ்கரன், ரஜனி, சிறிதரன்(கனடா), இன்பகரன்(லண்டன்) சப்தகரன்(புகையிரத கட்டிடப்பகுதி உத்தியோகத்தர்- வவுனியா) திசாகினி, ஜெயகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லோகநாயகி, சுவேந்திரா, சாந்தினி, மதிமலர்(மனோ- கனடா), ஜெயானந்தி(லண்டன்), காலஞ்சென்ற பபிதா, தவயோகராசா-குஞ்சு(உடுவில் பிரதேசசபை உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்திகன், மாதங்கி(ஆசிரியர்), பிரிந்தா(தாதிய உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), கோகுலன், யாதவன், மிதுலா(பிரான்ஸ்), துவாரகா(ஆசிரியர்-வவு/பெரியிகோமரசன்குளம் ம.வி), சஜீவன், நிசானி(கனடா), காலஞ்சென்ற ரதீசன், விஷ்னா, லவண்ணியா(யாழ்.பல்கலைக்கழக மாணவி), ஜீவிந்திரன், தாட்சாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அத்விக், ஆயுஸ்மன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை சோமராந்தோட்டம், உடுவில் கிழக்கிலுள்ள அவரது இல்லத்தில் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices