உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகசோதி சுதர்சன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் நிறைந்த நீரோடு...! உம் கனவு சுமந்த நெஞ்சோடு...! இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்! எங்கு சென்றாய்
கிளை விரித்த மரத்தில்..... ஒரு கூடு கட்டி ஓர் உயிராய் ஒட்டியிருந்தோம்.... நீ இல்லாத இடைவெளியை எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்
கலைந்து செல்லும் மேகமென காலங்கள் கடந்து போகின்றனவே ஆனாலும் உன் நினைவுகள் புயலென எரிமலையென கடலலையென எம் மனங்களில் பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
காலங்கள் கடந்து சென்றாலும் ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின் துடிப்பைப் போல் அருகிலே நீ வாழ்வதை நாம் உணருகின்றோம் இக் கணமும் உந்தன் நினைவால் துயருகின்றோம..
RIP