யாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மருசலின் ஜெகநாதன் விக்ரர் அவர்கள் 17-04-2020 அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மருசிலின், ரோசலின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மோசஸ், றீற்றா ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெபமலர்(செபம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சரோன், சோபியன், பிறின்சியா, மரினா, டின்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்வர்களான ரோஸ்மலர், யோசப், பாக்கியநாதன், புஸ்பமலர்(றீற்றா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயமணி, பொன்மலர், இன்பா, ஜெயா, ஜீவா, டெயிசி, காலஞ்சென்றவர்களான பரம்சோதி, அல்பிரேட், வைலட், ஜெயராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்
காலஞ்சென்ற அன்ரன் மற்றும் பகவத்சிங், ஜெயராஜ், மகிழ்ராஜ், கிளமென்ற், ஜெனிற்றா ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் நல்லடக்கம் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருவதோடு துயர் பகிர்கின்ற உறவுகள் தொலைபேசி வாயிலாகவே உங்கள் உணர்வுகளைப் பகிரும் வண்ணம் வேதனையோடு வேண்டுகிறோம்.