10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதம் மகாதேவன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:03/07/2024.
பத்து மாதம் சுமந்த எம் அன்னை மறைந்து
பத்தாண்டு பறந்ததம்மா பாரினில் பரிதவிக்கும்
உள்ளங்களை இங்கே பார்க்க பறந்தோடி வாருமம்மா!
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்