யாழ். மானிப்பாய் வடக்கு உச்சியோடையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அராலி மத்தி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் கந்தையா அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று சிவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராஜேஸ்வரி(கனடா) தம்பதிகளின் இளைய புத்திரரும், சிவஞானபோதன், காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகன்யா(ஆசிரியை- அராலி வடக்கு அ.மி.த.க பாடசாலை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிதுஷாரன், பிரிந்தவி(மாணவர்கள்- யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமார்- ரட்ணகுமாரி, அஜந்தா- கருணேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனஞ்சயன்- றிஷ்ஷா, சுகந்தி சிவபரமானந்தன், சுஜித்தா- கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிஷன், ரிதுஷன்- மறிக்கா, ஹேசிதா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அபிராமி, வைஷ்ணவி, டர்சி, யாழினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
டிராகவன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
Ryder, Kai ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2020 திங்கட்கிழமை அன்று அராலி மத்தியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி தெற்கு பூனாலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.