




குழந்தை மனதுடன் குதுக்கலித்து வாழ்ந்து குவலையம் விட்டு நீங்கிய என் சோதரமே , ஆழ்மனம் துடிக்கிறது அழுகையால் நிறைகிறது, இறுதியாய் உம் முகம் ஒரு முறை கண்டிட மாட்டோமா என இதயங்கள் ஏங்குகின்றது , ஆண்டவன் படைப்பிலே அற்புதமாய் நீ மலர்ந்தாய், எம் அகல் விளக்கே அதி சீக்கிரமாய் அணைந்தது ஏனோ? மருத்துவத் துறையினை மகத்துவமாய்க் கற்று, துறை பலகண்டு, இன் முகம் காட்டி இல்லாதார் குறை அறிந்து உள்ளதை பகிர்ந்து, அன்பும் அறமும் தாழ்மையும் சேவைமனப்பான்மையும் தாராளமாய் உம்மிடம் கொட்டிக் கிடந்த பொக்கிஷங்கள் . தேவையில் உளர்வோர்க்கு தேடித்தேடி சேவை செய்த உன் பாதங்கள் சில காலமாய் ஓய்ந்து கிடந்தது, உன் கொடிய பிணியினால். சேய்களின் நினைவால் சிந்தையில் நொந்து நிதம் நின்றாய் உன் ஆசைகள் நிறைவேறும் நீ துயில்கலைகயில் உன் சிந்தையின் எண்ணம் போல் சிறப்புடன் வாழ்வார்கள் உன் கண்மணிகள். மகிழ்வுடன் துயில் கொள்ளு அக்கா ஆண்டவனின் அதி பிரியமதால் அழைத்தார் சீக்கிரம் அவர் அண்டை , உன்னை கொடிய நோயின் துயரத்துக்கு விடை கிடைத்ததால் மனம் ஆறுதல் அடைகின்றோம். விடை தருகின்றோம் எங்கள் அன்பின் இனிய அக்கா ஆண்டவனில் இளைப்பாறுங்கள்!