3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், Basel Land ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜனனி தர்மராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுவரை எம்மோடு இருந்த நிரோ இன்று
காற்றோடு கலந்து கனவாகிப்போய் ஆண்டு இரண்டு
வந்தும் ஆறமுடியவில்லை- ஜனனி!
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே ஜனனி
உந்தன் பிரிவால் இன்றும்நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது.
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்