

காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த Dr யமுனா மார்க்கண்டு அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அருமை மகளே ஆருயிர் அக்காவே..
அன்பை அள்ளித் தந்த ஒப்பற்ற பெருமகளே..
ஆண்டுகள் தான் பதினைந்து ஓடி மறைந்ததம்மா..
ஆறவில்லை உனையிழந்த அளவற்ற பெருந்துயரம்...
ஆறுதல் இன்றி வாழ்கின்றோம் பாவிகளாய்...
மண்ணுலகை விட்டு மாயமாய் மறைந்ததேனோ...
மரணத்தின் பெருந்துயரை எமக்களித்து பிரிந்ததேனோ...
மறைந்தும் மறையாமல் வாழ்கின்றாய் எம் மனதில்...
மறக்க முடியாமல் வாழ்வை நாம் வாழ்கின்றோம்...
வாழ்க்கையும் நிலையன்று யாக்கையும் நிலையன்று ...
உன் நினைவுகள் மட்டும் வற்றாது எம் உயிரில்...
நீயில்லா உலகத்தில் நிறைவில்லை எம் வாழ்க்கை..
நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் கனக்கின்றது...
அழிவற்ற ஆத்மாவின் இன்னோர் அரும் படைப்பாய்...
அழகாக உன் வாழ்வு எங்கோ மலர்ந்திருக்கும்...
எங்கிருந்தாலும் நிறைவாக நீ வாழ..
எல்லா நலன்களும் இறையருளும் உனைச் சேர...
கண்ணீர்த் துளிகளை காணிக்கையாக்கி...
நல்லூர் முருகனை நெஞ்சார வேண்டுகின்றோம்....
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
அன்பு நிறைந்த அம்மா, ஆருயிர் சகோதரிகள். பாசமிக்க மைத்துனர்மார். பற்றுமிக்க பெறாமக்கள்