Clicky

கண்ணீர் அஞ்சலி
பிறப்பு 15 AUG 1942
இறப்பு 11 NOV 2020
அமரர் ஜேம்ஸ் எட்வேட் தம்பிப்பிள்ளை
பிரபல தொழில் அதிபர்- கொழும்பு
வயது 78
அமரர் ஜேம்ஸ் எட்வேட் தம்பிப்பிள்ளை 1942 - 2020 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் எட்வேட் அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் தம்பிப்பிள்ளை கெலன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வில்லியம் செல்வத்துரை அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எட்னா செல்வானந்ததேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குயின்ரன்(கனடா), துஷாறி பிறிசில்லா(பிறிசி- சுவிஸ்), தக்‌ஷிலா(தக்‌ஷி- பிரான்ஸ்), டிலான்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இன்டிக்கா, சுரேஷ், பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான றிச்சாட், றொபேட், சோபனா, ஆசீர்வாதம்(ஆசிரி) மற்றும் வசந்தா(கனடா), விமலா(வெலிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயானந்ததேவி(இலங்கை), யூனிஸ் ராகினி(கனடா), ஏனஸ்ற்(கனடா), தேவதஞ்சம்(கனடா), காலஞ்சென்றவர்களான யோகராஜா, பாலசிங்கம், அல்பிறட், கமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற புஷ்பம், சுகிர்தம், அருளானந்தம் மற்றும் சந்திரராஜா(கனடா), சிசிலியா(கனடா), அருஞ்சுளா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிறிஸ்ரின் ஜேன், றஞ்சினி, றதினி, றஜனி, வெனற் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அபிரா, எலைஜா, சபிநாத், பிரவிநாத், டெபோறா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  

அன்னாரின் பூதவுடல் 12-11-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எங்கள் அன்பின் செல்வமே
காந்தி ஆச்சிரமத்தின் அணையா தீபமே!
இன்று உன் சாந்த முகம் எங்கே
உன் பாசத்தின் அமிர்தம் எங்கே
உன் அன்பு அணைப்பு எங்கே

இன்று பட்ட மரமானோம் இங்கு பரிதவித்து நிற்கிறோமே
ஐயா உம்மை அரவணைக்க பெற்றவர்கள் காத்திருப்பர்
துரையாரை ஏந்தியெடுப்பதற்கு அண்ணன்மார் காத்திருப்பர்
அக்காவின் அரவணைப்பில் அமைதியாய் வாழ்ந்திடையா

தம்பி நாங்கள் ஒரு வார்த்தை பேசுவதற்கு
ஆண்டவன் வழி காட்டாவில்லை
உன் குரலைக் கேட்பதற்கோ நாங்கள் கொடுத்து வைக்கவில்லை
எங்கள் கண்களிலிருந்து ஆறாய் பெருகும் கண்ணீர்
உந்தன் பாதபடி சேருமையா எங்கள் உயிரான
உயிரே அமைதியுடன் தூங்குமையா... 

மருமக்கள் புலம்பல்

குஞ்சுமாமா
நீங்கள் போய்விட்டீர்களா
நாங்கள் வந்தால் உங்களை இனி பார்க்க முடியாதா?
உங்கள் உண்மையான, தூய்மையான அன்பை,உங்கள் சிரிப்பின் வழியில் நிறைந்த
பாசத்தை நாங்கள் அனுபவிக்க முடியாதா?
எங்களை உரிமையுடன் கண்டித்துகோபிக்கும் உங்கள் சீற்றத்தை
நாங்கள் ரசிக்க முடியாதா?
எங்கள் காந்தி ஆச்சிரம மூத்தவர்கள் முதல்
குழந்தைகள் வரை உங்கள் இரு கைகளையும்
அகட்டி அனைவரையும் இறுக்கி அனணத்து
ஒற்றுமையாக வைத்த உங்கள் செயலை இனி
யார் செய்யப் போகிறார்கள்?
நீங்கள் எங்கள் அன்பு
நீங்கள் எங்கள் முத்து
நாங்கள் எங்கள் எல்லாமே
நீங்கள் எங்களுக்கு
செய்தவை ஏராளம்
எங்கள் அனைவரிலும் வைத்த
அன்பு ஏற்றத்தாழ்வு அற்றறு
உங்கள் உள்ளம் தூய்மையானது
உங்கள் சிரிப்பு கள்ளம் கபடமற்றது
எங்கள் உள்ளங்களில் உங்கள்
அன்பு நிறைந்திருக்கு
குஞ்சுமாமா உங்களை எங்களுக்கு தந்த இறைவனுக்கு
கோடி நன்றிகள்
உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சங்களில்
நிறைந்து நிற்கும்

உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, மக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்.

தகவல்: விமலா, ஏனஸ்ற்

Photos

No Photos

Notices