

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜசிந்தா செல்வராணி தயாளன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்றைத் தாண்டவைத்தாய், ஆலைவாய் கரும்பாய் என் சேயே!
நாட்களை யுகங்களாய் கடக்கின்றேன் என் ஆருயிரே!
உன் அன்பை அரவணைப்பை நினைவிலும் கனவிலும் எண்ணி
ஏங்கி வாழ்கின்றேன் என் தாயே
சோகமின்னும் சாகவில்லை
கூடும் விழாக்களில் தேடுத்தவிக்கின்றோம் உற்றாரின் கலகலப்பே எம் உறவே!
எண்ணத்தில் மின்னலாய் வந்துவிட்டால் கண்களில் மழையாகிறாய் எம் நண்பியே!
ஏழுறவின் கண்ணீரும் ஆறாய் பெருகிட அமைதியாய்
நீ சென்றின்று ஓராண்டு!
பாருறவைப் பிரிந்து பரமனுறவை நாடி, ஆண்டொன்றைத் தாண்டியும் எம் துயரம் தீரவில்லை
எண்ணமெல்லாம் உன் நினைவும் கண்களெல்லாம் கண்ணீருமாய் காலத்தை கடக்கின்றோம்,
உன் ஆன்மா அமைதியாய் இளைப்பாற எந்நாளும் இறைவனை வேண்டுக்கின்றோம்,
அருளட்டும் இறைவன் உமக்கு தன்னிலத்தின் இணையில்லா இளைப்பாற்றி!
நீங்காத உம் நினைவால் நிலைதடுமாறிநிற்கும்
உமதன்பு:
அம்மா, கணவன், பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள் KUAMR ANNA