

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சண்முகராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈவிரண்டு ஆண்டுகளாய் உங்கள் பூமுகம் காணாமல்
ஏங்கித் தவியாய் தவிக்கின்றோம்,
ஓடியோடி வந்து உதவிடும் உன் கரங்கள்
இன்று எங்களோடு இல்லை
பாதி வழியில் பாசங்களை அறுத்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ?
வதனங்கள் மட்டும் போதும் என்று
புன்னகைக்கு வெண்ணிலவாய்
போட்டோவில் ஒளி தந்து புன் சிரிப்புடன்
எங்களை வாழ்த்தி நிற்கும் தெய்வமே!
நிழலாக இல்லாமல் நிஜமாக வந்திடுவீர்!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாங்கள் உணருகின்றோம்..
ஈராண்டு கடந்தாலும் எம் இதயத் தெய்வத்திற்கு
நீங்காத நினைவுகளால் என்றென்றும் வணங்கிடுவோம்
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், சகோகதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள்