யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்தம்பி குமாரதாஸ் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஐயாத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்ரன் பிறிற்சறா றீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருள்மேரி(தேவிகா) அன்புக் கணவரும்,
அலெக்ஸ்றோய்(Alexroi), ஒர்லியன்(Aurelien), அஞ்சலி(Angele), அஞ்சலிக்கா(Angelika) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குமாரகுலசிங்கம், குமாரலிங்கம், காலஞ்சென்ற குமாரசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2025 திங்கட்கிழமை அன்று மு. ப 11:30 AM மணியளவில் நடைபெறும் நிகழ்வை கீழ் உள்ள இணைப்பில் நேரடியாக காணலாம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Contact details:
Ceylon +94742714781(Mother-in-law) 
என்னை என்றும் விசாரிக்கும் நல்ல தகப்பன்
 என்னை என்றும் விசாரிக்கும், நல்ல தகப்பன் நீர் 
எனக்காய் பரிந்து பேசும், உண்மையுள்ளவர் நீர்
அழும் போது அணைக்கிறீர், அழகாக சுமக்கிறீர்
 தாய் என்னை மறந்தாலும், தாலாட்டினீர்!!!
நீ என் உறவென்று, வாயில் சொன்னனர் 
உதவிகள் வேண்டும் போது, ஊமையாகினர் 
நீ என் பிள்ளை என்று, உயர்த்தி வைத்தீரே 
உதறின கரங்களுக்கும், உதவ வைத்தீரே
அழும் போது அணைக்கிறீர், அழகாக!!!
 இதுதான் வழியென்று, யாரும் சொல்லவிலை
 நானே வழியென்று, தூக்கி சுமந்தீரே,  
பார்த்து போ என்று சொல்ல பலருண்டு
 பாதையில் கூட வர நீரேயுண்டு
அழும் போது அணைக்கிறீர், அழகாக!!!
முடிந்த என் வாழ்வை தொடங்கி வைத்தீரே 
முடி கூட கருகாமல், காத்துகொண்டீரே 
மண்ணில் விழுந்ததெல்லாம், மக்கி போகுமே 
விதையாய் விழ வைத்து, எழும்ப செய்தீரே
அழும் போது அணைக்கிறீர், அழகாக!!.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
                    
                        
                    
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. My/our most sincere condolences.