Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 22 MAY 1937
மறைவு 03 SEP 2022
அமரர் ஐயம்பிள்ளை நடராசா
ஓய்வுபெற்ற காணி அதிகாரி
வயது 85
அமரர் ஐயம்பிள்ளை நடராசா 1937 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கு நெல்வரையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வாழ்விடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 03-09-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, அன்னபிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற முத்தையா, செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அமிர்தாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

விமலன்(கனடா), விஜிதா(கலாச்சார உத்தியோகத்தர்) , விக்ரமன்(கண்ணன்- கனடா), நர்மதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருந்ததி(கனடா), செல்வகுமார்(ஆசிரியர்- யா/ ஒஸ்மானியா கல்லூரி), மதிவதனி(கனடா), பவானந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,

தருமலிங்கம்(கிளிநொச்சி), குமாரவேலு(கிளிநொச்சி), காலஞ்சென்ற சச்சிதானந்தன்(ஓய்வுபெற்ற வீடமைப்பு அதிகாரசபை அலுவலர்), மங்கையற்கரசி(யாழ்ப்பாணம்), சண்முகநாதன்(அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாக விரிவுரையாளர்), தயானந்தராஜா(ஓய்வுபெற்ற அதிபர் யா/ இந்து கல்லூரி), திருநாவுக்கரசு(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மலர்(கிளிநொச்சி), கனகேஸ்வரி(கிளிநொச்சி), அன்னபூரணி (ஓய்வுபெற்ற தலைமை தாதிய உத்தியோகத்தர்- வவுனியா), லிங்கநாயகம்(ஓய்வுபெற்ற அதிபர்- நெடுந்தீவு), ஆனந்தி(கனடா), சத்தியதேவி(ஓய்வுநிலை ஆசிரியை), புவனேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவலிங்கம்(முத்துசிவன்- ஊடகவியலாளர்) ஆகியோரின் மைத்துனரும்,

பிருந்தன், அபிராம், வித்தகன், சாமந்தி, மிதுனன், விஹாசா, விஷானா, அர்வின், ஹர்சன், சிந்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல, 300/2, கல்லூரி வீதி முரசுமோட்டை பரந்தனில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை ஐயன் கோவிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜிதா செல்வகுமார் - மகள்
நடராசா விக்ரமன் - மகன்
நர்மதா பவானந்தன் - மகள்
ஐயம்பிள்ளை தயானந்தராஜா - சகோதரன்