கிளிநொச்சி வட்டக்கச்சி Arumugam Road ஐப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை விஸ்னுகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி திகதி: 11-08-2023
எங்களுடன் பிறந்தவரே
உன் பிரிவு எங்களை என்றும்
வாட்டி இங்கு வதைக்குதய்யா
உன் போல் ஒரு சிறந்த சகோதரன்
உலகில் யாருக்கும் கிடைத்தில்லை
நாஙகள் உன்னை நினைத்து
இங்கு தவிக்கிறோம்.....
சகோதரங்களின் அன்புள்ளவராய்
பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய்
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எங்களால் மறக்க முடியாது
காலங்கள் கடந்து சென்றாலும்
உங்கள் பிரிவை மறக்கமுடியவில்லை
எங்கள் உயிர் உள்ள வரை
எம் சகோதரனின் நினைவுகள்
எங்களை விட்டு போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் அம்மா, மனைவி, பிள்ளைகள்,
சகோதரர்கள், மைத்துனர்கள், மருமக்கள்.!