

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை இரத்தினம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
தோன்றாப் பரம்பொருள் தன் துணை கொண்டிந்தத் தொல்புவியிற்
தோன்றி வளர்திருத் தொண்டுகள் செய்தெம் துயர் துடைத்து
வான்றோயும் இன்பாரு மாதவத் தந்தையை வாழ்த்தியிந்தத்
தேன்றோய் கவிமலர் சூட்டி வணங்கினம் சேவடிக்கு.
புல்லும் சிலும்பாது பூம்பாதம் தூக்கி வைத்து
மெல்ல நடந்து மேதினியை வலம் வந்து - நீர்
சொல்லும் பேச்சும், சிரிப்பும், கலகலப்பும் - அன்பின்
அரவணைப்பும் ஆறுதலும்....
அல்லும் பகலும் அயராது எமக்களித்த
அர்ப்பணிப்பும் அழியாது நெஞ்சினிலே
சொல்லும் வகையின்றி சோக நினைவலைகளினால்
சோர்ந்து தவிக்கின்றோம்.
மண்ணின் விடிவிற்காய் எண்ணித் துணிந்து பல
கண்ணியமாய் கடமைகளை அயராது தந்திங்கே
மண்ணிற்காய் முதல் மகனை மாவீரனாய் ஈய்ந்து
விண்ணிற்கும் நீர் விரைந்தீர் மாவீரர் நாளினிலே
கண்ணும் நீர் சொரியும் கரங்களதும் பூச்சொரியும்
எண்ணி விளக்கேற்றும் இந்நாளும் உம்நாளே.
அன்பு மக்கள்