1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் விக்காவில் ஆலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை இராமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
அப்பா நீங்கள் இல்லையே !
தந்தையே உன் முழு முகம் மறைய!
முழு நிலா தோன்றிவிட்டது!
இனிமேல் உருகும் பொழுதிற்கு உறக்கமில்லை!
காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது எல்லாம் உம் நினைவாக
துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே!
ஓராண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Accept our sincere condolences