
கிளிநொச்சி பூநகரி வேரவிலைப் பிறப்பிடமாகவும், முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை இராமநாதன் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னப்பிள்ளை(ஆத்திமோட்டை மன்னார்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிப்பிள்ளை(அரியமலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயலக்சுமி(அதிபர்- கிளி/ விவேகானந்தா வித்தியாலயம், இலங்கை), தயாலக்சுமி(ஆசிரியை- சவுத்கரோ தமிழ் கல்விக்கூடம், லண்டன்), விஜயலக்சுமி(இலங்கை), உதயலக்சுமி(ஆசிரியை- கிளி/ சிவபாதகலையம் அ.த.க.பா, இலங்கை), கிரிநிவாசன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராமகிருஸ்ணன், நகுலேஸ்வரி, ரகுநாதன், இராதாகிருஸ்ணன்(வங்கி முகாமையாளர்- இலங்கை), நாகேஸ்வரி, இராமச்சந்திரன், பரமேஸ்வரி, ரங்கநாதன், கேசவன்(அதிபர்- கிளி/ வேரவில் இந்து மகாவித்தியாலயம்), ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாணிக்கவாசகன்(மலேசியா), சுரேஸ்(லண்டன்), குகதாசன்(கனடா), தேவானந்தன்(இலங்கை), கஜேந்தி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனகரத்தினம், நிரஞ்சனாதேவி, எக்கலாதேவி, தளையசிங்கம், சுசீலாதேவி, சிவபாலன், றஞ்சி, துளசி, விஜயநாதன், சீதேவிப்பிள்ளை, பத்மநாதன், பாலசிங்கம், முருகேசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கதிர்முகிலன், சுலக்ஷன், சுலக்ஷி, துவிசா, சரணியா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in Peace Anna.