மரண அறிவித்தல்
மண்ணில் 08 MAY 1949
விண்ணில் 25 MAY 2022
திரு ஐயம்பிள்ளை பசுபதிப்பிள்ளை (செல்லத்தம்பி)
வயது 73
திரு ஐயம்பிள்ளை பசுபதிப்பிள்ளை 1949 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இல. 361 திருநகர் மல்லாவியை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை பசுபதிப்பிள்ளை அவர்கள் 25-05-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனிநாயகம், பபா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜான்சி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரி(லண்டன்), கியூரி(லண்டன்), அன்ரனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முருகதாசன்(லண்டன்), விஜிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ஜூன், அக்சரா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சண்முகரத்தினம் மற்றும் தர்மலிங்கம்(சின்ராசு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினம் சதானந்தம், தயானந்தன்(பிரான்ஸ்), ஜெயானந்தன்(பிரான்ஸ்), சுதானந்தன்(ஸ்கந்தபுரம்), ஜீவானந்தன்(பிரான்ஸ்), சுபானந்தன்(வேப்பங்குளம் வவுனியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கணேஸ்வரன்(டென்மார்க்), கண்ணன்(கனடா), காலஞ்சென்ற ராஜேஸ்வரன் மற்றும் கயநி(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சிந்துஜன்(பிரான்ஸ்), தனுசிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜயந்தி(ஜேர்மனி), ரவி(ஜேர்மனி), காலஞ்சென்ற ராஜன், தனம்(ஜேர்மனி), பிள்ளை(ஜேர்மனி), உமா(ஜேர்மனி), பாபு(ஜேர்மனி), சுபா(சுவிஸ்) மற்றும் காலஞ்சென்ற சுதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2022 வியாழக்கிழமை அன்று இல. 17, 2ம் ஒழுங்கை மகாறம்பைக்குளம் வவுனியா எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அன்ரனி - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்