Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 OCT 1944
இறப்பு 06 NOV 2016
அமரர் ஐயம்பிள்ளை நீலாவதி 1944 - 2016 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை நீலாவதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!

ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute