யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்திரன்(கண்ணன்), சுகந்தினி, சுந்தரேசன்(ஈசன்), காலஞ்சென்ற சுதர்சன்(சுதன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தினி(பாப்பா), சுரேஸ்குமார், நந்தினி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற வைரவநாதன் மற்றும் அன்னமுத்து, ராசம்மா, காலஞ்சென்ற ராசமணி மற்றும் அரசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகுந்தலாதேவி, இந்திராதேவி, தவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோஷன், அபிலாஷ், டினேஷ், ஆரபி, விதுஷா, அனுஷ்கா, கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.