யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இசைஞானவதி அமிர்தலிங்கம் அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலியும், கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் நாகலிங்கம் அவர்களின் 48ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் இசைஞானவதி அமிர்தலிங்கம் பிறப்பு: 22-03-1932 இறப்பு: 09-12-1974
அமரர் அமிர்தலிங்கம் நாகலிங்கம் பிறப்பு: 30-10-1931 இறப்பு: 16-09-1976
அன்பெனும் வெள்ளம் பாயும்
ஆழ்கடல் நெஞ்சே - நல்ல
பண்பெனும் பசுமை பூக்கும்
பழமுதிர் சோலை நீயே - எங்கள்
தூயவள் பெருமை எல்லாம்
சொந்தங்கள் சொல்லக் கேட்டோம்
கல்வியில் சிறந்த தாயே!
காலனின் கணக்கில் தோற்றள்
எங்கள் கண்களில் பாய்ந்த நீரில்
அரை நூற்றாண்டே
கரைந்து போச்சு
தாயென மடியில் நாங்கள்
தவழ்ந்த நாள் அன்றி வேறு
தாய்மையின் சுகத்தைக் காண கொடுத்து
நாம் வைக்கவில்லை ..ஆனால்
கருவறை இருந்தபோது
கனவுகள் வளர்த்திருப்பாய்
பெரியவர் ஆகும்போது
பேர்புகழ் பெற்றப் பிள்ளை
உரிய நல் மக்கள் என்று
ஊர் புகழ் பாடக் கேட்டு
மகிழ்வுற நினைத்திருப்பாய் அம்மா!
உன் கனவுகள் முடித்தோம் தாயே
ஊர் உலகேற்ற நல்ல பதவிகள் பெற்றோம்
இன்று தாயவள் நீயும் இல்லை
கலங்கினோம் காலக் கொடுமை
ஆயினும் தாயே! என்றும்...
எங்கள் இதயத்தில் நீயே தெய்வம்
உன் சிதை எரிந்த போதும்
தந்தையின் சிந்தனை எரிந்ததாலே
நல்வழி வளர்த்த தந்தை
தீயினைச் சுமந்தார்!
தினம்
கண்ணீரினில் கரைந்தார்
ஓராண்டு முடிந்து சில மாதம் இல்லை
ஓடியுன் பாதம் சேர்ந்தார்!
இருவிழி இழந்தோம் நாங்கள்
பகலிலும் குருடர் ஆனோம்
அம்மா!
தந்தை தாய் மடி தவழ்ந்த இன்பம்
வேறிடம் கிடைப்பதில்லை
உங்கள் அடி சேரும் வரை
உங்கள் நினைவில் வாழும் அன்புப் பிள்ளைகள்!!!
உஷா, றோகான், காலஞ்சென்ற றிச்சி, ஆஷா, அஞ்சு- ஓக்லண்ட், நியூசிலாந்து.
Dear Usha acca, Rohan, Asha and Anju, I was your neighbour in Kirillopone Edmonton Road. I came to Aunty’s funeral. I remember you all. Can’t believe 50 years have passed. Your mom was a beautiful...