Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 1954
இறப்பு 22 FEB 2020
திரு இருதயநாதர் பீற்றர்தாஸ் 1954 - 2020 மண்டைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இருதயநாதர் பீற்றர்தாஸ் அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இருதயநாதர், விக்ரோறியாப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற லாசறஸ், மரிய திரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி அஞ்சல்(ஜொய்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,

அஜந்தா(இத்தாலி), ஜோன் பிரசாத்(அவுஸ்திரேலியா), பிறின்சி மயூறி(இத்தாலி), ஆன்கியூறி(ஆசிரியை- புனித பத்திரிசியார் கல்லூரி), எறின் பிறின்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டொன்சன்(இத்தாலி), வித்தியா(அவுஸ்திரேலியா), பிலமன் றிச்சி(இத்தாலி), ஆனந்தராஜா(பெலறுஸ்), கிருபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஞ்சலோ பீற்றர்(கொழும்பு), அனற் ஜீவா(அவுஸ்திரேலியா), வின்சன் போல்(அவுஸ்திரேலியா), இருதயமலர்(நோர்வே), பீற்றர் போல், அருட்பணி தயாபரன்(புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஸ்வின், ஆன்றியா, அஸ்வினா, றித்திகா, ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் பழைய பூங்கா வீதியிலிருந்து மண்டைதீவிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதனைத் தொடர்ந்து பி.ப 3:00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர்  நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்