
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐரீன் செல்வமணி பிள்ளை அவர்களின் 85வது அகவை தினமும், 19ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
அம்மா எங்கள் முதல் எழுத்து நீங்கள்
அம்மா எங்கள் முதல் உலகம் நீங்கள்
அன்பு மகளாய், சகோதரியாய், மனைவியாய்,
அன்னையாய், மாமியாராய், பாட்டியாய்
எத்தனை சோதனைகள் வந்தபோதும்
தளராது நின்று தந்தையாக தாயாக
இரண்டு பரிமாணங்களை எற்று
எங்களை திறம்பட ஒளிரச்செய்த நீங்கள்
எங்கள் வளர்ச்சியைப் பார்ப்பதற்கு
எங்கள் அருகில் நீங்கள் இல்லை அம்மா.
முத்தான உங்களை தொலைத்து
பத்தொன்பது வருடங்கள் ஆகியும்,
உங்களை தேடி அழைக்கின்றோம்.
அம்மா நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்
85 ஆண்டு அகவையில்
நாங்கள் உங்களுடன் இல்லாத போதும்
உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு
எப்பொழுதும் உண்டு என்பதில் ஐயம் இல்லை.
அன்பராம் இயேசு கிறிஸ்துவின்
வருகையில் உங்களை சந்திக்கும் வரை
உங்கள் நினைவுகள் என்றும் தொடரும்...