

ஐக்கிய அமெரிக்கா Maryland Bowie ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐறீன் கிருபராணி வில்லியம்ஸ் அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வின்ஸ்ரன் தர்மறாஜன் வில்லியம்ஸ், கிரேஸ் புஷ்பராணி(புஷ்பா) தம்பதிகளின் அன்பு மகளும்,
கிறிஸ்டீனா நேசராணி(நேசி) வில்லியம்ஸ், டானியேல் ஆனந்தராஜன்(ஆனந்தன்), ஜோய்ஸ் அருள்ராணி(அருள்- இணை சகோதரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு கோவிட் தொற்றுக் காரணமாக தனிப்பட்ட முறையில் குடும்பத்தாருடன் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வு கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னர் ஒழுங்கு செய்யப்படும்.
கிருபாவின் நினைவாக மலர்களை அனுப்புவதற்குப்பதிலாக, இலங்கையில் போர்க்காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், கீழே உள்ள இணைப்பில் நிதியை வழங்கலாம்
Link: http://nowwow.org
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Heartfelt condolences.