
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி சரவணமுத்து அவர்கள் 23-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜேஸ்வரி, சண்முகவடிவேல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குணபாலசிங்கம் மற்றும் தேவராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, அன்னலட்சுமி, சீவரட்ணம், சிவயோகம் மற்றும் வாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஜரூபன், நிருஜா- குகதாஸ், நிருஜன் -யதுஷா, திரிபுரா, சுபிட்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலாஸ், நிவிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
வங்கியடி,
இணுவில் கிழக்கு.