யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இனசென்ரா சுலோஜினி சவுந்திரநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எனைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த எனதன்புத்தாயே!
நேசம் மாறவில்லை நினைவுகள் கலையவில்லை!
நேசித்த எனது உள்ளம் அலைமோதிப் போனதால்
உற்ற துணை இழந்து வேதனைப்படுகிறேன்!
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் தொடர்கிறது
பாசம் வைத்த உறவுகளின் இதயங்கள்
கனமாக உள்ளன
மறக்க நினைக்கும் போதெல்லாம்
அதிகம் துடிக்கிறதே...
மறக்க முடியாத எமதன்பு இளையவளே
அழகான உன் வதனம்- அதில்
அழியாத புன்னகை
வாழ்ந்த நாட்கள் வசந்தமாக்கி விட்டுச்
சென்ற வாடா மலரான எமது
இளைய சகோதரி சுலோஜினியே
ஆண்டொன்று சென்றாலும்
ஆறத்துயர் எமை விட்டு போகுமோ
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், மகன், சகோதரர், சகோதரிகள்,
உறவினர்கள், நண்பர்கள்
May the Lord be with you at this time, She is safe in the arms of Jesus now. Please accept our deepest condolences.