

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி ஐயாத்துரை அவர்கள் 24-07-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதி, பசுபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன்(லண்டன்), ஜெயதீபன்(லண்டன்), ஜெயபிரபா(லண்டன்), குலதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாக்கியம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவசோபனா(லண்டன்), நிஷாந்தினி(லண்டன்), சிறீகாந்தன்(லண்டன்), காலஞ்சென்ற பிருந்தா(தாதிய உத்தியோகத்தர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியும்,
தீவிக்கா, றெஸ்னா, றெஜிக்கா, தனுஜன், ஆருஜன், தசானா, சுஜீவன்(லண்டன்), குயின்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2019 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரணவாய் தெற்கு பூவரசந்திட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது கண்ணீர் அஞ்சலிகள்