அன்பான மாமி, இயேசு கிறிஸ்துவின் தியாகபலியின் மேல் நீங்கள் விசுவாசம் வைத்து தேவனுடைய கிருபையினாலே இரட்சிப்பின் சந்தோஷமடைந்த நீங்கள், இவ்வுலகத்தினாலுண்டான பாடுகளின் ஊடே வாழ்ந்து நல்ல போராட்டத்தை போராடி பெற்றுக்கொண்ட விசுவாசத்தைக் காத்துக்கொண்டு ஓட்டத்தை முடித்து உங்களுக்கான ஜீவ கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக உங்கள் நித்திய பிரவேசத்திற்காய் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மேலும், உங்கள் புத்திரி ஜீவதர்ஷினி பற்றீஷயாவை எனது வாழ்க்கைத் துணையாய் தந்து ஆசீர்வதித்த உங்களை இப்பிரிவின் வேளையில் நினைத்து இதயம் கலங்குகிறேன். கிறிஸ்துவுக்கு ஊழியனாகிய எனக்கு, உலக இன்பங்ளையும் ஆசைகளையும் வெறுத்து கிறிஸ்துவினிமித்தம் எல்லாப் பாடுகளையும் என்னோடு அனுபவித்து, இயேசுவுக்காக இதுவரையும் அர்ப்பணித்து தன் பிள்ளைகளையும், ஏன் பலநூறு திக்கற்ற அநாதைப் பிள்ளைகளையும் வாழ வைக்கவும் ஒரு பொக்கிஷத்தைப் பெற்றுத்தந்ததையிட்டு வாழ் நாளெல்லாம் கர்த்தரைத் துதிக்கிறேன். கர்த்தருடைய ஊழியனாய் எனக்கு நீங்கள் செலுத்திய மரியாதையும், உங்கள் ஆரோக்கியத்திற்கான தேவைகளின் வேளையில் பல முறைகள் தொலைபேசியின்மூலம் உங்களுக்காய் கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணவும் எனக்கு வாய்ப்புகளை கொடுத்ததையும் நினைவுகூறுகிறேன். கடைசியாக 2019ம் ஆண்டில் மீண்டுமொருமுறை முகமுகமாய் உங்களைப் பார்க்க எனக்குக் கிடைத்த சிலாக்கியத்தை பெறுமதியாக எண்ணுகிறேன். நீங்கள் எனக்கு கொடுத்த உங்கள் பொக்கிஷங்களில் ஒன்றாகிய மகள் ஜீவாவிற்கு இயேசு திரும்பி வரும்வரை அல்லது மரணம் எங்களைப் பிரிக்கும் வரை தொடர்ந்தும் உண்மையுள்ள கணவனாகவும், அவளைக்கலங்காமலும் பாதுகாத்துக்கொள்ளுவேன் என்பதையும் உங்களுக்கு தேவ சமுகத்தில் மீண்டும் உறுதியாய் கூற விரும்புகிறேன். உங்கள் பிரிவில் துயருறும் உங்கள் சந்ததிகளும், சந்தானங்களும் ஆறுதல் பெறவும், பிதாவாகிய தேவனின் அன்பை கிறிஸ்து இயேசுவின் தியாகபலியின்மூலம் பொற்றுக்கொள்ளவும் தொடர்ந்து பிரார்த்திப்பேன் என்பதையும் உங்களுக்கு உறுதியுடன் வாக்களிக்கிறேன். கர்தருடைய நாளில் முகமுகமாய் உங்களைக் காண்போம் என்கிற உறுதியான நிட்சயத்தோடு இவ்விரங்கலை நிறைவுறுகிறேன்.
God is eager to do it again. Jehovah hates death; he views it as an enemy. (1 Corinthians 15:26) He has a longing to conquer that enemy, to undo death by means of the resurrection. He yearns to...