Clicky

Born 27 JUN 1962
Rest 15 JAN 2026
Mr Indran Karalasingham (Indrasenan)
Retired Director Tritel Services Proprietor Investment Promotion Consultants
Age 63
Mr Indran Karalasingham 1962 - 2026 Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute
Rest in Peace
Mr Indran Karalasingham
1962 - 2026

இந்திர சேனா! பள்ளியில் பாலகர்களாகப் பழகத் தொடங்கி, பால்ய வயதிலிருந்தே ஒன்றாய் பயணித்தோம். பள்ளிக்குப் பக்கத்து தெருவில் நீ குடியிருந்ததால், உன் வீட்டில் பகல் உணவு உண்டு, பசியாறிய நாட்கள் நினைவில் நிறைந்துள்ளன. பாதிநேரம் பாடசாலையிலும், மீதி நேரம் உன் வீட்டுச் சாலையிலும் மட்டைப்பந்து விளையாடி, மகிழ்ச்சியாக காலத்தை கழித்தோம். பருவ வயதிலும் நட்பு தொடர்ந்தது. பாதி ஆயுள் கடந்த பின்னும், பழகியது மறவாது, அந்தப் பழக்கத்தை தொடர்ந்தோம். நினைவிருக்கின்றது இந்திரா – எல்லாமே நினைவில் இருக்கின்றது. பள்ளிக்காலத்தில் உனக்குப் பிடிக்காத சில சம்பவங்கள் உன்னை விலகச் செய்தன. பள்ளியை விட்டு நீ சென்றபின்பும், பாதையில் பார்த்தால் “ஐசே” என்று பாசத்தோடு அழைத்து, பரிகாசம் செய்தவர்களிடமும் பரிவு காட்டினாய். நிகழ்ந்ததை நினைக்காமல், உண்மையான நட்புடன் நலம் விசாரித்தாய். பாதிப்புகளை மறந்து அன்புடன் பழகுபவன் அந்நொடியே பரமனாகிறான். நீ பரமன் ஆனபொழுதே, நாங்கள் பாவமன்னிப்பு பெற்றோம். மன்னிப்பு கேட்பவன் மனிதன்; மன்னிப்பவன் மாமனிதன்; கேட்காவிட்டாலும் மன்னிப்பவன் இறைவன். அந்த இறைவன் வடிவே நீ, இந்திரன். நன்றி நண்பா. “அடேய்” என்ற சொல்லை அன்பின் சொல்லாக்கிய பெருமை உனக்கே உரியது. “ஐசே” என்ற சொல்லில் நீ உச்சரித்தபோது இருந்த கவன ஈர்ப்பு தனித்துவமானது. இன்று I say — ஐசே! நீ மனிதாபிமானம் மிக்க நல்ல நண்பன். எம்மோடு பயணித்த நீ, இப்போது ஏன் இடையில் இறங்கி விட்டாய்? இந்திரலோகம் செல்ல முடிவெடுத்தாயோ? அங்கே, இங்கே நீ பெற்றதும் பெறாததும் எல்லா இன்பங்களும் அளவின்றி கிடைக்கட்டும். இறந்தாலும் அங்கே வாழ்வான் எங்கள் இந்திரசேனன். ஆனால் உன் இல்லாமை எங்களுக்கு பேரிழப்பு. இறைவனின் திருப்பாதமே இனி உனக்கு கதி. உன் ஆன்மா சாந்தியடையட்டும். நீங்கா நினைவுகளை விட்டுச் சென்ற நண்பா, எங்கள் இறுதிவரை உன் நினைவுகளோடு வாழ்வோம். உன்னை என்றும் நேசிக்கும் நண்பர்கள்.

Write Tribute

Notices

Obituary Sat, 17 Jan, 2026
31st Day Remembrance & Thankyou Message Sat, 14 Feb, 2026