

திதி:13/08/2025
யாழ். திக்கத்தினைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Muehlacker ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இந்திரகுமாரி விக்கினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 13-08-2025 புதன்கிழமை ஜெர்மனி இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.