

எதை சொல்லி ஆறுவது எப்படி தான் தேறுவது----? சொந்தங்களி ன் உரிமையே__! பந்தங்களை பிரியாது பாதுகாத்த புதுமையே….! ரத்தத்தின் அர்த்தமான பதுமையே---! சித்தத்தில் நிறைந்த புலமையே--! மரணங்கள் வாழ்வை முடித்து வைக்கிறது ஆனால்---நேசித்த மனங்களை - உயிரோடு கொளுத்திப் போடுகிறது இப்படி எல்லாம் மரணம் அழைத்து போகையில் வாழும் வாழ்வு வெறுக்கிறது மீண்டும் கண் முன் தோன்றிட வேண்டும் என ஏங்கும் மனம் தவிக்கிறது வாழ்வை அழகாக வாழும் காலத்தில் மரணம் அழைத்ததேன்…? உறவு பொய்கையில் ஓர் பூமரம் அடியோடு சரிந்ததேன்….? எப்படி ஆறுவோம் சம்மந்தியே….! எப்படி ஆறுதல் கூறுவோம் நீங்கள் தானே முன் பந்தியே….! கண்ணீர் உடைத்து கரைபுரண்டு வெந்நீர் பட்ட தேகமாய் உயிரை சுடுகிறது…! பன்னீர் தெளித்த மேகமாய் மீண்டும் வர இறையைத் தொழுகிறது….! மகளைத் தந்து மனையாள வாழ்ந்தோம் தங்கள் மகளாய் கொண்டாட நாங்கள் எல்லாம் மனதோரம் சாய்ந்தோம்….! என்றும் திங்கள் போல் தித்தித்த நீங்களின்றி இனி எப்படி வாழ்வோம்…..! அப்பாவை தேடும் பிள்ளைகள் அப்பப்பாவை தேடும் பேரர்கள் எல்லாவற்றையும் தாங்கிச் சுமந்து மகிழ்ந்த துணை….! இத்தனையையும் தாண்டிய தாகம் தீரா உறவுகள்…..! அத்தனை பேரின் உளமும் ஒளியிழந்து தவிக்கின்றது ஓரமாயிருந்து என் கண்ணும் அழுகிறது…….! பேரானந்த வாழ்வை கொண்டாடும் காலத்தில்….! இந்த பேரிடியை தாங்க நெஞ்சம் மறுக்கிறது….! சம்மந்தியே … ! தங்கள் ஞாபகங்கள் என்னை கொல்கிறது…..! மூப்பின் மூச்சிழுக்கும் சுவாசத்தில் காற்றாய் தங்கள் நினைவுகள்….! உறவுத் தோப்பில் நீங்கள் இல்லை என்கையில் உணர்வுகள் கூட விறகுகள்……!!!! ஆறாத்துயருடன் சம்மந்தி தவம் குடுபத்தினர்🙏🙏🙏
My dearest Indu Anna - you’ve always been a great source of strength and love in my life. Your kind voice and your deep love have been sources of strength over the years. While I am deeply saddened...