அமரர் இந்திராணி சதாசிவம்
பிறப்பு : 28 நவம்பர் 1933 - இறப்பு : 16 ஜனவரி 2015
பதுளை கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இந்திராணி சதாசிவம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் பதினொன்று
ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே,
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்.
நிலவை, சூரியனை, ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே,
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது.
கனவுகள் கூட கலையலாம்,
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு
கலையாது, மறையாது.
கனடாவில் வாழும் மகள்
ஸ்வேந்திரினி நிர்மல்சந்திரன்,
ஆஸ்திரேலியாவில் வாழும் மகள்
சுதர்ஷினி அனுரா,
இங்கிலாந்தில் வாழும் மகன்
ரவி ஷங்கர்,
இலங்கையில் வாழும்
மகன்
நரேஷ் ஷங்கர் —
எல்லோரின் இதயங்களிலும்
நீங்கள் உயிராய் வாழ்கிறீர்கள், அம்மா.
அன்புப் பேரக்குழந்தைகள்
அனுரா வியாகுருநாதர்,
நிர்மல்சந்திரன்,
குமாரி —
உங்கள் பாசத்தையும் ஆசீர்வாதத்தையும்
இன்றும் தங்கள் வாழ்க்கை பாதையில்
ஒளியாகச் சுமந்து செல்கின்றார்கள்.
உங்கள் அன்பு, அருள், வழிகாட்டுதல்
எங்கள் வாழ்வின் ஒளியாக என்றும் இருக்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம், அம்மா.
எங்கள் உள்ளங்களில் என்றும் வாழும்
எங்கள் அன்புத் தாயாருக்கு
எங்கள் முடிவற்ற நினைவுகளும்
அன்பு வணக்கங்களும்.
அமரர் சதாசிவம் தேவர்
பிறப்பு : 22 ஜூன் 1931 - இறப்பு : 3 மார்ச் 2002
பதுளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் தேவர் அவர்களின் 24ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தந்தையே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் பதினொன்று
ஓடி மறைந்ததப்பா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தந்தையே,
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்.
சூரியன், நிலா, ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே,
அங்கே அப்பா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது.
கனவுகள் கூட கலையலாம்,
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு
கலையாது, மறையாது.
கனடாவில் வாழும் மகள்
ஸ்வேந்திரினி நிர்மல்சந்திரன்,
ஆஸ்திரேலியாவில் வாழும் மகள்
சுதர்ஷினி அனுரா,
இங்கிலாந்தில் வாழும் மகன்
ரவி ஷங்கர்,
இலங்கையில் வாழும் மகன்
நரேஷ் ஷங்கர் —
எல்லோரின் இதயங்களிலும்
நீங்கள் உயிராய் வாழ்கிறீர்கள், அப்பா.
அன்புப் பேரக்குழந்தைகள்
அனுரா வியாகுருநாதர்,
நிர்மல்சந்திரன்,
குமாரி —
உங்கள் வழிகாட்டுதலும் ஆசீர்வாதமும்
இன்றும் தங்கள் வாழ்க்கை பாதையில்
ஒளியாகத் தொடர்கின்றது.
உங்கள் உழைப்பு, நேர்மை, தியாகம்
எங்கள் வாழ்வின் அடையாளமாக என்றும் இருக்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம், அப்பா.
எங்கள் உள்ளங்களில் என்றும் வாழும்
எங்கள் அன்புத் தந்தையாருக்கு
எங்கள் முடிவற்ற நினைவுகளும்
அன்பு வணக்கங்களும்.