யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இன்பராணி சின்னத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா...
நீங்கள் எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள்
என்பதை எங்கள் மனம் இன்னும்
ஏற்றுக்கொள்ளவில்லை.
காலம் இரண்டு வருடத்தைக் கடந்தாலும்,
உங்கள் அன்பின் வெப்பம் இன்றும்
எங்கள் இதயங்களில் குறையாமல் இருக்கிறது.
நீங்கள் இல்லாத வெற்றிடம் என்றும்
நிரப்ப முடியாத ஒன்றாகவே இருக்கும்."
உங்கள் தியாகங்கள், உங்கள் பிரார்த்தனைகள்,
உங்கள் அக்கறை, உங்கள் பாசம்...
இவை அனைத்தும் எங்கள் வாழ்நாள் முழுவதும்
எங்களை வழிநடத்தும் பொக்கிஷங்கள்.
அம்மா...
நீங்கள் எங்களுக்கு தந்த அன்பு எந்த
அளவுகோலாலும் அளக்க முடியாதது.
கண்ணீருடன்... அன்புடன்... உங்களை என்றும்
நினைவு கூரும் உங்கள் கணவர், பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
May the departed soul rest in peace? My heartfull condolences to all the family members?