5ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/212898/fcedf415-474a-4dbc-b38e-37cdda748694/22-6276591ac16b7.webp)
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran-Livry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இமானுவேல் பத்மராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
எமை ஆளாக்கிய தந்தையின்
பிரிவு ஆறாது என்றுமே எம்
மனதில் காலங்கள் போகலாம்,
காயங்கள் மாறலாம், நெஞ்சினில்
உள்ள உங்கள் நினைவுகள் என்றும்
நம்மை விட்டு போகாது...
உங்கள் நினைவுகளை
காலமெல்லாம் நாங்கள் சுமந்து
நிற்போம்
இறைவன் ஏன்
எங்களிடமிருந்து
உங்களை
பறித்துக்கொண்டார்
ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
எம் பார்வையிலிருந்து மறைந்தாலும்
எமது இதயத்திலுருந்து
ஒரு போதும்
மறையப் போவது இல்லை..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்