

திதி:13/10/2025
அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் (மம்மி):
பிறப்பு: 31 OCT 1947
இறப்பு: 30 AUG 2012
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறிந்து பதின்மூன்று
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே மம்மி!
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றது மம்மி..!!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
----------------------------------------------------------------------------------------------------
அமரர் இளையதம்பி இரத்தினசிங்கம்(பப்பா- ஆச்சாரியார்):
பிறப்பு 28 DEC 1938
இறப்பு 28 SEP 2021
யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி இரத்தினசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் பப்பா..!
காணும் காட்சிகளில்
கண் முன்னே நிற்கின்றீர்
முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம்
உங்கள் அன்பு முகம்- இனி
எப்போ காண்போம் பப்பா..?
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!