Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 FEB 1936
இறப்பு 02 MAR 2023
அமரர் இளையதம்பி சாம்பசிவம்
வயது 87
அமரர் இளையதம்பி சாம்பசிவம் 1936 - 2023 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கோயிலாக்கண்டி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சாம்பசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 19-02-2024

பாசத்தின் உறைவிடமான அன்புள்ள அப்பாவே!!
 உங்கள் பரிவான புன்னகையில்
எம்மனதில் நிலவெறிக்கும்
பேசும் மொழியினிலே எவர்
 மனதும் ஊற்றெடுக்கும்

ஒளி சிந்தும் ஆதவனாய்
நல்ல வழி காட்டியதால்
அவ்வழியே வாழ்கின்றோம்
இமைப் பொழுதும் உமை மறவோம்.

நீங்கள் எம்மைப் பிரிந்து மறைந்து
இன்றுடன் ஆண்டு ஒன்று ஓடிவிட்டன.
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எங்களுக்கு பொற்காலமாகும், நற்காலமாகும்.

கடந்த காலம் எக்காலத்திலும் திரும்பிவரப் போவதில்லை
ஆனாலும் நீங்கள் எம்மை வாழவைத்து
மகிழ்வித்த காலத்தில் விட்டுச் சென்ற ஞாபகங்கள்
ஏராளம் ஏராளம்.

ஒவ்வொரு ஞாபகச் சின்னமும்
ஒவ்வொரு கதை சொல்லும்.
அவற்றுள் உங்கள் திருமுகத்தை
 தினமும் காண்கின்றோம்.

உங்களை எங்களால் மறக்க முடியாது.
மறக்கவும் மாட்டோம் மறவோம் மறவோம் மறவோமே!

ஆண்டவன் திருவடியில் அமைதியாய்
நீங்கள் வாழ ஆண்டாண்டாய் உங்கள்
நினைவுடனே பிரார்த்திப்போம்..!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 04 Mar, 2023
நன்றி நவிலல் Sat, 01 Apr, 2023