திதி:06/12/2024.
யாழ். ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி நடராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஏழு சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்...
உங்கள் நினைவுகளில் எம் கண்கள்
உடைந்து கண்ணீர் இன்றும் பெருகுதையா!
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
உம் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது...
நீங்கள் வாழ்ந்த காலங்கள் நெஞ்சில்
என்றென்றும் பசுமையாய் நிலைத்திருக்கும்...
எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவே!
நொடிப்பொழுதில் எமை
நோகவிட்டு சென்றுவிட்டீர்கள்...
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும் துளியின் வழியில்
உங்களை கண்டிட முடியாதோ...
ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!