10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இளையதம்பி தெட்சணாமூர்த்தி
இளைப்பாறிய கணக்காளர்- மத்திய வங்கி, கொழும்பு, இலங்கை
வயது 80
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும், வத்தளை மற்றும் கனடா வன்கூவரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி தெட்சணாமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு
வாழ்ந்திருந்த அப்பாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த அப்பாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute