யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி அன்னரத்தினம் அவர்கள் 10-01-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
சீவரத்தினம்(கைலேஸ்) இலங்கை ,யோகேஸ்வரன்(குஞ்சன்) இத்தாலி, விஜயலட்சுமி (விஜி) சுவிஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாமலர், சரோஜாதேவி(கனடா), சோதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, மங்கையற்கரசி , பராசத்தி, பாக்கியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம் , கந்தையா , சுப்பிரமணியம் , முருகேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜசோதா(நோர்வே), ஜசோதரன்(பிரான்ஸ்), ஜெனகன்(இலங்கை), ஜெயந்தன்(ஜேர்மனி), சுபாங்கினி(இத்தாலி), தனுஷா(கனடா), சிந்துஜா(சுவிஸ்), சாருஜன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரம்மிஜா, காலஞ்சென்ற ரித்திஜா(நோர்வே), பவித்திரா, மயூரிகா(இலங்கை). ஜசிரா(ஜேர்மனி), கவீஸ்வரன், கெவின்(இத்தாலி), அஷ்வின், அகனியா, அபிரா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2026 திங்கட்கிழமை அன்று நடைபெற்று அதனைத்தொடர்ந்து கோம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.