யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி தம்பு அவர்களின் நன்றி நவிலலும், சபிண்டீகரணமும்.
உதடுகள் இரண்டும் மூடி
உள்ளத்துள் புகுந்தோடி வெளிவரும்
மூச்சின் பேச்சொலிதான் அப்பா.....அப்பா என்ற
சொல்லின் உயிர் நாடி
எங்கள் குடும்பம் என்னும் கூட்டுக்கு அவரே முழு அத்திவாரம்
தந்தை மூலம் விந்தை மிகு சிந்தை
வீட்டில் பரவும் கேளீர்!
வீடு என்னும் கோபுரத்துக்கு
அவரே சுமைதாங்கி வழிகாட்டு, நம்பிக்கை, நட்சத்திரம்
தொன்மை வரலாறுகள் சொல்லத்தக்க
பளை மாவிட்டபுரம் என்னும் விளை நிலத்தில்
அமரர் இளைத்தம்பி தம்பு
1938.10.11ல் இவர் பிறந்தார்.
நடேஸ்வராக் கல்லூரியில் நயமாய் நலமாய்
அறிவு நுட்பமாய் கல்வி கற்றுயர்ந்தார்.
பிள்ளை பருவம் கள்ளமில்லா வெள்ளைப்பருவம் கடந்து
வாலிப மிடுக்கோடு வளர்ந்தார்
யாழ் பாடிப் பெற்ற யாழ்ப்பாண தீபகற்பகம் யாழ்ப்பாண சரித்திரம் சொல்லும்
அமரர் இளையதம்பி தம்பி அன்னார்
வாழ்ந்த முறையும் பெருமை துயராச் சொல்லும்
சோம சுந்தரப் புலவர் பிறந்தந
வாலியூரில் திருமணம் முடிந்தார்.
துணை எனக் கரம் பிடித்தார்.
வளம் செழிக்கும் தெல்லிப்பளையில் குடும்பம் என்ற
வசிப்பிட வாழ்வு இருப்பாய்
கூட்டுக்குடும்பப் பண்பாட்டுக் களத்தில்
கூடித்தோழர்களோடு கூழ் குடித்து
தனிக்குடும்பம் ஆனார் தற்பொழுது
உழைப்பு என்னும் தொழில்
இலங்கைப் போக்குவரத்துச்சபையில் ஆரம்பம்
வாழ்க்கை என்னும் பயணம் மெதுவாய்
ஆழமான நதி அமைதியாய் ஊர்வது போல
பிள்ளைகள் என்னும் செல்வங்கள்
வீட்டின் தொட்டில்களில் சிரித்தனர்.
உலகம் என்னும் உருண்டையுள்
புரள்வுகள் வந்து புரண்டன.
உழைக்கும் ஊழியர் உழைப்பு கொள்ளையிடப்பட்டது.
உழைப்பாளர் உரிமைகள் நசுக்கப்பட்டது
சம்பள உயர்வு மறுக்கப்பட்டது
உழைக்கும் வர்க்கத்தின்
தோழனாய் உயிர்ப்புடன் மிடுக்காய் எழுந்தார்
தோழர் தம்பு இது ஒன்றும் வீண் வம்பு இல்லை
மானுட உணர்வின் விழுமியப் பாய்ச்சல்
தோழர் தம்பு இவரை
இவர் செயலை புரியாதோர் பலர்
கூடி நகைத்து நையாண்டி பேசினார்
பன்றிகளின் முன் கோபக்கணலை வீசினார்
தோழர்கள் முன் முத்துக்கள் போன்று
கருத்துக்களை விதைத்தார் சிந்தையில்
தொழிலாளர் உரிமையின் வலிமை உழைப்பாளர்
மாபெரும் சக்தி
தொழிற் சங்கத்துள் உண்டென கண்டுணர்ந்தார்.
விலங்கிடப்பட்ட மானுடத்தின் விலங்குடைக்கும்
பொதுவுடைமைச் சிந்தையை
புதிய வழிகாட்டும் மார்க்கமென தரித்தார்.
காரைநகர் இலங்கை போக்குவரத்து சபையில்
கடமை தொழிற்சங்கத்தின் விடிவு தேடும் தலைவர்
மிடுக்காய் எடித்து வைத்த அடிகள்
பற்பல பூக்கள் மட்டு மல்ல
வேரும் தேடலுக்கும் ரசனைக்கும் உகந்ததுதான்
குடும்பம் தொழிற்சங்கம் தொழில் என்னும்
புல் சுமைகள் அப்போது சுமந்தார்.
பிள்ளைச்செல்வங்கள் வளர்ந்து பள்ளி சென்றனர்.
மழைபில்லாப் பஞ்சம், வறுமை, நெருக்கடி,
அரசியல், பொருளாதார, சமூகக் குழறுபடிகள்,
சமநிலை குழம்பி நெருக்கடிகள் மோதின.
சமூகத் தொண்டன் வீட்டுக்கு கூரை வழியே
செல்வம் என்று கொட்டுவதில்லை
பொறுப்பற்றது போன்ற பொறுப்புள்ள மனிதர்
ஒரே தொப்பிள் கொடியில்
உடன் பிறந்த சகோதரர்கள்
சண்முகம், சபாபதி, நாகேந்திரம், சரஸ்வதி ஆகும்.
அவர் மனைவி, பிள்ளைகுட்டி, மருமக்கள்
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளகள்,
குட்டிப்பரம்பரை ஒன்று ஆல்போல் விழுது விட்டது
உள்நாடு வெளிநாடுகள் சுற்றிச் சுழன்று வாழ்கிறார்கள்
வேரும் கொடியும் அறுபடாமல்
உரிமை என்றும் உயர் சம்பளம் என்றும்
உரிமைக்குரல் கொடுத்து இவர் வேலையிழந்த காலமுண்டு
மே தினத்தில் வீதி வழியும்
கூட்டமொன்றை சேர்த்து அணி திரட்டிக் கொடுத்தார்
உழைத்துண்போர் வாழ்வு செழிப்பதற்காய்
ரோசகாரனாய், தனித்துவமாய் எதிர்நீச்சல் போட்டு வாழ்வதிலும்
மகத்துவம் உண்டு
வறுமையிலும் வடுக்கள் இன்றி வாழ்தல் முக்கியம்
மரணத்தின் பின்னர் அப்பா பற்றி
தோழர் தம்பு பற்றிய
எண்ணக்கருக்கள் மாறியுயரும் நம்க்குள்
அவருக்குள் உயிர்ப்புடன் கலந்த ஆழமும் மனிதமும்
உண்மை நேர்மையும் நம்க்குப் புரியும்.
குடும்பம் என்பது குடும்ப உறவுகளின்
கருத்து மோதல் களம் தான்
அப்பா ஒரு நடைமுறைப்புத்தகம்
அந்த பக்கங்களை புரட்டுங்கள்
புதிய புதிய பாடங்கள் சொல்லித்தரும்.
தமது ஆற்றல் ஆளுமை நேசிப்பு, அன்பு என்பவற்றை
குடும்பத்துக்கும் தான் வாழ்ந்த சமூகத்துக்கும்
கையளித்து விட்டுச் செல்லும் மரணங்கள்
அழிவதில்லை
வாழும் போது பிணங்கள் போல் நடமாடுவதை விட
செத்தும் வாழ்வது மேலானது.
தோழர் தம்பு மரணத்தை வென்றவர்
அவர் ஆத்மா சாந்தி பெற எண்ணுகிறோம்.
அமரர் நினைவு இப் பூமியில் என்றும் நிலைக்கட்டும்.
த.ஜெகதீஸ்வரன்(மகன்)
மன்னார் சாலை முகாமையாளர்
குடும்பத்தினர் சார்பாக
”நன்றி மறப்பது நன்றன்று” என்பது வள்ளுவர் மறை.
27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று எங்கள் அன்புத் தந்தை அமரர் இ.தம்பு அவர்கள் இறைபதம் அடைந்த துயரமதில் பங்கு கொண்டோருக்கும், பல வழிகளிலும் உதவி புரிந்தோருக்கும், அனுதாபச் செய்திகள் தெரிவித்தோருக்கும், அஞ்சலிப் பிரசுரங்கள், அஞ்சலிப் பதாதைகள் வெளியிட்டோருக்கும், மலர்வளையங்கள் சாத்தி அஞ்சலி செலுத்தியோருக்கும், இறுதிக்கிரியை வரை தோளோடு தோள் நின்று உதவிய அனைத்து உறவுகளுக்கும் எம் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று வில்லூன்றித் தீர்த்தக் கரையில் அந்தியேட்டிக் கிரியையும், 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை எமது இல்லத்தில் வீட்டுக்கிருத்தியக் கிரியையும் இடம்பெறவுள்ளது. தற்போது பரவும் கொரோனா நிமித்தம் சுகாதார பணிமனையின் அறிவுறுத்தல் காரணமாக குடும்பத்தாருடன் கிரியைகளை நிறைவுசெய்யவுள்ளோம் என்பதனையும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.