4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இளையதம்பி மகேந்திரன்
ஸ்ரான்லி கோப்பரேசன் உரிமையாளர்
வயது 76

அமரர் இளையதம்பி மகேந்திரன்
1944 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
Tribute
52
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி மகேந்திரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்