யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், பரந்தன், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இலகுப்பிள்ளை குலசேகரம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை நிகழ்வும், நன்றி நவிலலும்.
”நாளும் பொழுதும் தேய்ந்துவிட நாட்கள் சென்றது தெரியவில்லை
நீங்கள் போனதும் புரியவில்லை அது நிஜமா என்பதும் விளங்கவில்லை
அன்பிற்கினியர் எமதப்பா இனி எங்கே உமை யாம் காண்போமோ
நினைவுகள் வந்து எமை சூழ நித்தமும் துயரத்தில் நாம் வாடுகிறோம்
இவுலகில் இனி உமை எங்கே காண்போம் என துவண்டு ஏங்குகிறோம்.”
எமது அப்பாவின் மறைவு செய்தி அறிந்து நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் ஆறுதல் கூறியவர்கள், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் வெளியிட்டவர்கள், Covid 19 ன் நெருக்கடியிலும் கூட நேரடியாக பங்கு கொண்டு ஆறுதல் தந்தவர்கள், மலர்மாலைகள் மற்றும் மலர் வளையங்கள் வைத்தவர்கள் உட்பட அனைத்து வழிகளிலும் உதவிய அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
Sri Lanka Postal Minister,ilavukathakili,parankinoi,