Clicky

கண்ணீர் அஞ்சலி
Pray For Sri Lanka
இறப்பு - 27 NOV 2025
Pray For Sri Lanka 2025 இலங்கை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

இலங்கையில் டிட்வா(Ditwah) புயல் இயற்கை சீற்றத்தால் 300 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த கடினமான காலத்தைக் கடந்து எழுந்து நிற்க இறைவன் அருள் புரியட்டும்.

நம் உறவுகளின் குடும்பத்தினருக்கு எமது ஐ.பி.சி, தமிழ்வின், லங்காசிறி, RIPBOOK இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.

உங்கள் அனுதாபங்களை எங்கள் Facebook மூலமாகவும் தெரியப்படுத்தலாம்.

உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே பகிருங்கள்...!

தீராத வலிகள்
...................  

காற்றின் கோபத்தில்
கரைந்தது பல உயிர்கள்…

அலைகள் அலறியது,
மனங்களும் உடைந்தது.

புயல் வந்து சென்றதோர்
நொடியில் மாறின வாழ்வுகள்

கண்ணீரின் நிழலில் நின்றது
ஏராளம் துயர்கள்.

இழந்த உயிர்களின் சுவாசம்
காற்றில் இன்னும் உள்ளது,

அவர்கள் நினைவுகள்
இதயங்களில் என்றும் நிற்கும்.

பாதிக்கப்பட்ட வீடுகளின்
சுவர்களில் எழுதப்பட்டது துயரம், ஆனால்
அந்த துயரத்தைக் கடக்கும்
வலிமை மனிதர்களின் உள்ளத்தில் உள்ளது.

Ditwah புயல் எடுத்துச் சென்ற அன்புகள்
திரும்ப வராவிட்டாலும்,
அவர்களின் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் நம்மைத் தாங்கும்..

தகவல்: RIPBOOK

Summary

Photos

Notices