Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 05 AUG 1965
மறைவு 09 JUN 2023
அமரர் குணரெத்தினம் திருவருள்ராஜா (அருள்)
Kokkuvil Hindu College
வயது 57
அமரர் குணரெத்தினம் திருவருள்ராஜா 1965 - 2023 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குணரெத்தினம் திருவருள்ராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் உருவமாய்
அரவணைப்பின் இருப்பிடமாய்
பண்போடு எம்மனதில்
பாசத்தை விதைத்தவரே
நிலையில்லா வாழ்வியலில்
நீடிக்கும் உம்முறவென
கனவோடு வாழ்ந்திருந்தோம் எம்
கனவு கலைந்ததுவேன்
கற்பனைகள் சிதைந்ததுவேன் எம்
கனத்த இதயங்கள் என்றும்
உம் நினைவைச் சுமக்கும்.

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்ம சாந்தி பூசை 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 36 Mason Avenue, Harrow, Middlesex, HA35AR எனும் முகவரியில் உள்ள லண்டன் ஐயப்பன் ஆலயத்தில் நடைபெறும்.

பூசை நேரங்கள்:
11:00am - சிவன் அபிஷேகம்
12:00pm- விஷேட பூசை
12:15pm- ஆத்ம சாந்தி கூட்டுப்பிரார்த்தனை(Temple hall)

அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிராத்தனையிலும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
(11:00 தொடக்கம் 15:00 வரை)

Note:
FYI: Parking restrictions applied to most of the local Road till 12 midnight.
You can park at Harrow Leisure Centre Car park (3hrs free), postcode : HA3 5BD

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அரி - மைத்துனர்
ஜசி - சகோதரி
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்