யாழ். சிவகுலவீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் இந்திராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாட்கள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம் எம்
இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை
கேட்டிடவே விரிகிறது!
விழியோரம் கசியும் கண்ணீர்
உறவுகளை மட்டுமல்ல
உள்ளத்தையும் ஒரு நொடி
உறைய வைக்கும் அம்மா
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா-
அம்மா உங்கள் கருவிலே சுமந்து
எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி
எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா ....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 04/06/2026 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு கிரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 06/06/2026 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
என்றும் நினைவில்
குடும்பத்தினர்
Heartfelt condolences to Rajeevan and family. May her blessings always be with you and your family. May she rest in peace.