
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோகுப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருணாசலம் யோசப் முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
மித்திரகுமாரி(கனடா), கலாநிதி சத்தியகுமாரி(கனடா), ஜெயகுமாரி(டென்மார்க்), வசந்தகுமாரி(இலங்கை), ஜீவகுமாரி(கனடா), தேவகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, சவுந்தரராஜா, செல்வராஜா, இரட்னராஜா, சற்குணராஜா, நேசமலர் மற்றும் முத்துராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், பரிமளம், கமலா, இரத்தினமலர் மற்றும் பராசக்தி(கனடா), காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் சுகிர்தம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவநேசன்(ஜேர்மனி), மகிழ்தினி(ஜேர்மனி), கிருபாநேசன்(ஜேர்மனி), தவநேசன்(ஜேர்மனி), இலந்தினி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
சற்குணலிங்கம்(கனடா), தேவராஜா(கனடா), தனபாலசிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் இரத்தினராஜா(கனடா), Rev. ராஜ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோசன், அல்பேட், நவீனா, கிரிசா, ரவீன், தீபன், சருசன், கோட்சன், நோனி, கெல்சியா, ஜெசிக்கா, நெபோ, சைலஸ், பெஞ்சோ ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
பேளின், அன்சன், மேசன், ஆலியா, சலீனா, ரிசான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் பாசமிகு மாமி. பப்பா மீது அளவில்லா மரியாதையும் அன்பும் கொண்டவர். சின்னண்ணன் என்று சொல்லும் போதே கண்களில் அன்பு தெரியும். நாங்கள் மாமி வீட்டிற்குப் போனால் அன்றைக்கு அவ வளர்த்த கோழி ஒன்றுக்கு...