யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரியம்மா குமாரசாமி அவர்கள் 19-10-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா குமாரசாமி(இளைப்பாறிய காணி வெளிக்கள உத்தியோகத்தர்- ஓவசியர்) அவர்களின் நேசமிகு மனைவியும்,
இராசலிங்கம்(பேர்லின்), காலஞ்சென்ற இராசமலர், இராசரத்தினம்(லண்டன்), இராசசோதி(இளைப்பாறிய ஆசிரியை- கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி), இராசேஸ்வரி(லண்டன்), இராசபூபதி(ஆசிரியை - ரி. பி. ஜாயா ஸாஹிரா வித்தியாலயம்), காலஞ்சென்ற இராசகோபாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பவானியம்மா(ஓய்வுபெற்ற உப அதிபர்), வீரசிங்கம்(ஓய்வுநிலை அரச கணக்குகள் பணிப்பாளர்- திறைசேரி), சோமநாதர்(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குழந்தைவேலு, தில்லைநாயகி, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீதேவி(பேர்லின்), வசந்தகுமாரி(லண்டன்), காலஞ்சென்ற சிவரூபன், வல்லிபுரநாதன்(லண்டன்), ஆனந்தநடராசன், உதயகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னுச்சாமி, தியாகராசா, காலஞ்சென்ற துரைராசா, கனகரத்தினம் ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,
பத்மினி அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
விக்ரர், தசானா, போசினி, கோபிசன், றஜீன், அக்சயன், தர்சிகா, தர்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அரியன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி.