

யாழ். உடுவில் தெற்கு மானிப்பாய் ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கெளரீஸ்வரன் ஸ்ரீகாந் அவர்கள் 28-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கச்சியம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கெளரீஸ்வரன் ஸ்ரீரதி தம்பதிகளின் அன்பு மகனும்,
கெளசிகன், கெளரிகாந், துளசிகன், ஜனதர்சினி, ஐங்கரமதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஸ்தூரி, தாட்சாயினி, சந்துரு(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதித் அவர்களின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.